Friday, September 3, 2010

நந்திகிராம்: சிவப்பு பஜ்ரங்கதளத்தின் பாசிச வெறியாட்டம்! (மீள்பதிவு)

போலீசு சீருடை அணிந்து கொண்டு போலீசோடு சேர்ந்து வந்த 250-க்கும் மேற்பட்ட சி.பி.எம். குண்டர்கள் நாட்டுத் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கோடாரியோடு நந்திகிராம மக்கள் மீது கொலைவெறியாட்டம் போட்டுள்ளனர். போலீசார் பூட்ஸ் அணிந்திருக்க, சி.பி.எம். குண்டர்கள் சாதாரண செருப்புடன், சீருடையில் அரசு இலச்சிணை இன்றி தாக்குதல் நடத்தியதை நந்திகிராம மக்கள் அனைத்துப் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி நிறுவனங்களிடம் சாட்சியமளித்துள்ளனர். நந்திகிராம மக்களைக் கொண்றொழிக்கும் வெறியோடு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முதுகு, வயிறு, நெஞ்சு, தலைப்பகுதியில் குண்டடிபட்டு மாண்டு போயுள்ளார்களே தவிர முழங்காலுக்குக் கீழாகக் குண்டுக் காயம்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.

நந்திகிராமத்துக்குச் சென்று கொலைவெறியாட்டம் போட்ட போலீசிடம் 303, 672 ரக குண்டுகளே துப்பாக்கியுடன் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் மாண்டுபோன விவசாயிகளின் பிரேதப் பரிசோதனையில் பலரது உடலில் 315, 38 ரக குண்டுகள் பாய்ந்துள்ளதைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்து உள்ளனர். சி.பி.எம். குண்டர்கள் கள்ளத் துப்பாக்கியால் நந்திகிராம மக்களைச் சுட்டுக் கொன்று வெறியாட்டம் போட்டுள்ளதற்கு இதுவொன்றே இரத்த சாட்சியாக உள்ளது.

சி.பி.எம். குண்டர்கள் நந்திகிராம் அருகேயுள்ள தெஹாலி கிராம பாலத்தை ஒட்டியுள்ள ஜனனி செங்கற் சூளையில் ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்துக் கொண்டு அங்கிருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக கொல்லப்பட்டவர்களை சாக்குத் துணியில் போட்டுத் தரதரவெனப் பிணங்களை அவசரமாக இழுத்துச் சென்று செங்கற்சூளையில் போட்டு சி.பி.எம். குண்டர்கள் எரித்துள்ளனர். கொலைவெறியாட்டம் நடந்த களத்திலிருந்து செங்கற்சூளை வரை தரையெங்கும் தெறித்துக் கிடந்த இரத்தக் கறைகளே இக்கொடூரத்தை நிரூபித்துக் காட்டுகின்றன.

மையப் புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) ஆரம்ப விசாரணையிலேயே இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டு உள்ளதோடு, அச்செங்கற் சூளையிலிருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், போலீசு சீருடை, இரும்புத் தொப்பி, சி.பி.எம். கட்சிக் கொடிகள், சி.பி.எம். கட்சியின் இளைஞர் அமைப்பான டைஃபி (DYFI) யின் பிரசுரங்கள் - கொடிகள், நந்திகிராம வீடுகள் - தெருக்களின் வரைபடம் முதலானவையும் மையப் புலனாய்வுத் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர மரங்களிலும், புதர்களிலும் சி.பி.எம். குண்டர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளும், இரத்தக்கறை படிந்த சாக்குத் துணிகளும் கைப்பற்றப்பட்டு 10 சி.பி.எம். குண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.ஐ. விசாரணைக் குழுவிடம் சிக்கிய 10 ரவுடிகளின் செல்போன்களில் மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களின் செல்போன் எண்கள் பதிவாகியிருக்கின்றன.

நந்திகிராமத்தில் நடந்த போலீசு - சி.பி.எம். குண்டர்களின் கொலை வெறியாட்டத்தில் மாண்டு போனவர்களின் எண்ணிக்கை 14தான் என்கிறது அரசு. ஆனால் நந்திகிராம வட்டாரத்தில் பலர் ‘காணாமல்’ போயுள்ளனர். இதுதவிர, சி.பி.எம். குண்டர்கள் செங்கற் சூளையில் எரித்துக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியே வரவில்லை.

இந்தப் பயங்கரவாத வெறியாட்டங்களையெல்லாம் விஞ்சும் வகையில் சி.பி.எம். குண்டர்கள் நந்திகிராமப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவியுள்ளதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. நந்திகிராம கொலை வெறியாட்டத்தின் போது சாதாரண செருப்பு அணிந்து போலீசு சீருடையில் வந்த சி.பி.எம். குண்டர்கள் பல பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிப் பாலியல் வன்முறையை ஏவியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரு பெண்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்து நாடெங்கும் நாறுகிறது. இது தவிர பாலியல் வன்முறையை ஏவிய சகாதேவ் பிரமானிக் என்பவனை நந்திகிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் அடையாளம் காட்ட, அவனைப் பிடித்து மக்கள் விசாரித்த போது அவன் தான் சி.பி.எம். ஆதரவாளன் என்றும், சி.பி.எம். தலைவர்கள் சொன்னதாலேயே இப்படிச் செய்ததாகவும் பி.டி.ஐ. செய்தியாளர் முன்னிலையிலேயே வாக்குமூலம் அளித்துள்ளான்.

இது வெறும் போலீசு அடக்குமுறையல்ல; சி.பி.எம். என்ற சிவப்பு பஜ்ரங்தளம் மக்கள் மேல் ஏவிய பாசிச வெறியாட்டம். இது தெளிவாகத் தெரிந்து விட்டதால் இதுகாறும் இவர்களை ஆதரித்து வந்த அறிவுத்துறையினரும் கலைஞர்களும் மேற்கு வங்க அரசு வழங்கிய விருதுகளை புத்ததேவின் முகத்தில் எறிந்திருக்கின்றனர். மேற்கு வங்கத்தின் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட இவர்கள் முகத்தில் காறி உமிழாத குறையாகக் கண்டித்து எழுதுகின்றனர்.

மேற்கு வங்காள அரசின் கலாச்சார நிறுவனமான பஸ்சிம் பங்கா பங்களா அகாடமியின் துணைத்தலைவரும் பிரபல கவிஞருமான சங்கா கோஷ் நந்திகிராமத்தில் நடந்திருப்பது சி.பி.எம். கட்சி மற்றும் அரசின் பயங்கர வெறியாட்டம்; இதற்கு மேலும் நாங்கள அரசாங்கப் பதவியில் நீடிப்பது அவமானம்” என்று அறிவித்து இந்த அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களோடு பதவி விலகியுள்ளார். பிரபல நாவலாசிரியரான மகாஸ்வேதா தேவி “இது பாசிஸ்டு அரசு” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். மேதாபட்கர், அருந்ததிராய், நீதிபதி சச்சார் என அறிவுத்துறையினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

(இன்னும் தொடரும்...

அடுத்த பதிவு:

 நந்திகிராம்: கொலையை நியாயப்படுத்த கோயபல்ஸ் பிரச்சாரம்!

===============================================================

தொடர்புடைய பதிவுகள் (தவறாமல் படிக்க கீழே சொடுக்கவும்...)

1.  மார்க்சிஸ்டு கட்சியினரை வெற்றிலைப் பாக்கு வைத்து விவாதிக்க அழைக்கிறேன்!


2.  நந்திகிராம்: சி.பி.எம். கட்சியின் கொலைவெறி!

3. மே.வங்கம்: முதலாளிகள் தொழில் தொடங்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற சி.பி.எம். கட்சியின் வாதம் உண்மையா?!

4. லால்கார்: சி.பி.எம். - காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!

5. டாட்டாக்களின் புரட்சியும் மக்களைத் திண்ணும் கண்டுபிடிப்புகளும்!

6. உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக்கொவதற்கு அரிவாள்! அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைக்கச் சுத்தியல்!!

7. கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இண்டியா [ரவுடியிஸ்ட்]!

8. காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்! தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!!

No comments:

Post a Comment