Wednesday, September 29, 2010

அநீதி மன்றங்களின் வரலாற்றுப் பக்கங்களும் வரவிருக்கும் அயோத்தி தீர்ப்பும்!

த்வானி தலைமையிலான சங்கபரிவார வானரங்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்கிறவரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த வழக்கின் தீர்ப்பு நாளை (29.09.2010)வழங்கப்படவிருக்கிறது. "தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும் அதனை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு அமைதிகாக்க வேண்டும்" என்று வரவிருக்கும் தீர்ப்பின் யோக்கியதையை முன்னறிவித்திருக்கிறார் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்.


இந்த வலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு ஒருபுறமிருக்கட்டும், இதுபோன்ற மதவெறிப் பயங்கரவாதப் பிரச்சினைகள் தொடர்ப்பான விசாரனைகளில், நமது தேசத்தின் ஜனநாயகத்தூண்களில் ஒன்றான நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருப்பதன் வரலாறு ஒன்றும் இருக்கிறது. அவற்றை ஒருமுறை நினைவுபடுத்திப் பார்த்தாலே வரவிருக்கும் தீர்ப்பின் தன்மை எளிதாக விளங்கும்.


இந்துக்கள் மத்தியில் கலவர-கரசேவகர்களை உற்பத்தி செய்யும் நோக்கத்தோடும், பாபர் மசூதி இடிப்புக்கு ஆள்பிடிக்கும் நோக்கத்தோடும் அத்வானி குஜராத்தில் தொடங்கிய (த்)தயாத்திரை உலகறிந்தது. அந்த ரதயாத்திரையின் முடிவிலேயே, அதுவும் அதனை நடத்திவந்த அத்வானியின் தலைமையிலேயே பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆனால், அவ்வழக்கிலிருந்து, இதே அலகாபாத் நீதிமன்றத்தால் அத்வானி விடுவிக்கப்பட்டார். இந்த நீதிமன்றம்தான் நாளை "பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்" என்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது!


அத்வானியின் பாபர் மசூதி இடிப்பு நடவடிக்கை ஒருபுறமிருக்கட்டும், அதற்கு முன்னதாக அவர் நடத்திய ரதயாத்திரை நெடுகிலும் திட்டமிட்டு அவரால் உருவாக்கப்பட்ட கலவரங்கள், உயிர்ப்பலிகள் என்று ஏராளமான ரத்தசாட்சியங்கள் இருந்தும் அவற்றுக்கெல்லாம் வழக்கும் கிடையாது, வாய்தாவும் கிடையாது.


தொன்னூறுகளின் துவக்கத்தில், தனது பத்திரிக்கையானசாம்னாவின் மூலம் வெறியூட்டி 2000-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நரவேட்டையாடிய, பம்பாய் கலவரத்தின் நாயகன் பால்தாக்கரே, நமது ஜனநாயக அரசின் சட்டத்தால் சீண்டப்படவேயில்லை. ஆனால், அக்கலவரத்திற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட இசுலாமிய பயங்கரவாத குண்டுவெடிப்புகள் வழக்காடப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.



குஜராத்தின் முதல்வரான நரமமிசமோடியிடம் சி.பி.. விசாரனை நாடகங்களை நடத்துவதும், அந்த போலியான விசாரனைக்குக் கூட நேரில் ஆஜராவதிலிருந்து அடிக்கடி ஜகாவாங்கிக் கொண்டிருக்கும் மோடியையும் நாம் எளிதில் மறக்கவியலாது. போலி என்கவுண்டர் புகழ் அமித்ஷா (குஜராத்தின் மோடி அரசாங்கத்தின் அமைச்சர்) வுடனான வழக்கு விசாரனை என்கிற விளையாட்டாகட்டும் அனைத்தும் ஒரு கேளிக்கையைப் போல நிகழ்த்தப்படுகின்றன.


பெண் சாமியார் பிரக்யாசிங் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கூலிப்படைக் கும்பல் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரனைகளைக் கொஞ்சம் நுனுகிப்பார்த்தால், நீதிமன்றத்தின் இந்துத்துவப் பாசம் அப்பட்டமாகத் தெரியும்.


ஆனால் மறுபுறமோ இசுலாமியராகப் பிறந்துவிட்ட காரணத்தால், போலி என்கவுண்டரின் மூலமாகவும் போலி வழக்குகளின் மூலமாகவும் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் எத்தனையோ பேர். இததான் இந்த நீதிமன்றங்களும் சட்டத்தைப் பாதுகாக்கின்ற அரசும் போலீசும் நீதிக்கு எதிராக அநீதியை பிரயோகித்துக்கொண்டிருக்கும் உண்மையான வரலாறு!


பொதுவாக இந்துவெறி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நீதிமன்றமே கவசமாக இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஏகாதிபத்திய நலனுக்காக முன்வைக்கப்பட்ட சேதுக்கால்வாய்த் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, மக்கள் வரிப்பணம் சில நூறு கோடிகள் கடலுக்கடியில் கொட்டப்பட்டுவிட்ட பிறகு, கடலுக்கடியில் இருந்த மணல்திட்டைராமர் பாலம்என்று இந்த வானரங்கள் கூப்பாடு போட்டது உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தவுடன், அந்த திட்டத்திற்குத் தடைவிதித்த உச்சநீதிமன்றம், தமது தடையாணைக்கு ஆதாரமாக எதைக் காட்டியது தெரியுமா, நண்பர்களே? துளசிதாசர் ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்தையும்தான். "அது ராமர் பாலமோ, ஆதாம் பாலமோ அல்ல அது ஒரு மணல் திட்டு" என்று ஆய்வு செய்து அறிவித்த புவியியல் வல்லுநர்கள் தெரிவித்த அறிவியல் சார்ந்த கருத்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, உச்சநீதி மன்றத்தாலும் இந்திய அரசாலும் பழிவாங்கப்பட்டார்கள்.


(இதைப் படிக்கும்மார்க்சிஸ்ட்தோழர்கள் கவனத்திற்கு "ஆதாம் மணல் திட்டுக்கள் பற்றிய வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிவியல் கழகத்தின் கருத்துக்களை அரசு மறுபேச்சின்றி திரும்பப் பெற்றது மிகவும் சரியான நடவடிக்கையே" என்று உங்கள் கட்சியின் மாபெரும் தலைவர் யெச்சூரி 22 - அக்டோபர்’07 ஹிந்து பத்திரிகையின் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.)


ஆக, இந்திய நீதித்துறையின் யோக்கியதை இவ்வாறகத்தான் வரலாறு முழுக்க பதிவாகியிருக்கிறது. மதவெறி நடவடிக்கைகளில் மட்டுமல்ல, மறுகாலனியாக்க நடவடிக்கைகளிலும் இந்த நீதித்துறையும் அரசும் அநீதிக்குத்தான் துணைபோயிருக்கின்றனவேயொழிய நீதிக்கும் அவர்களுக்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை.


போபால் வழக்கு விசாரனையில், நீதிமன்றமும், மத்திய அரசும், மத்திய புலனாய்வுத்துறையும் கொலைகாரன் ஆண்டர்சனுக்கு செய்த உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்த தொடர் துரோகங்களையும் ஒரு கனம் நினைத்துப்பார்த்தாலே, இந்த நீதிமன்றங்களின் உண்மைநிலை, வஞ்சகத்தன்மை எளிதில் புரியும். இதே நீதிமன்றங்கள்தான் மத்திய அரசு தண்டகாரன்ய ப்ழங்குடியின மக்களின் மீது நடத்திவரும்காட்டு வேட்டைஎனும் உள்நாட்டுப் போரை ஆதரித்து கருத்துக்கள் தெரிவித்திருக்கின்றன.


இதுமட்டுமா, மேலவலவு முருகேசனை பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் தலையறுத்துக் கொண்ற சாதி வெறியர்களைக் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பெழுதியதும் இதே நீதிமன்றங்கள்தான். மகாராஷ்டிராவின் கயர்லாஞ்சியின் துயரத்தை யாரும் அத்தனை எளிதாக மறந்திருக்க முடியாது. அந்தக் கயர்லாஞ்சி வழக்கில் நீதிமன்றத்தின் அயோக்கியத்தனங்கள் அப்பட்டமான ஆதிக்கசாதி வர்க்கத்துக்கு சாதகமாக இருந்துவருகிறது. "பீயத்திண்ணுடா பறநாயே" என்று திருச்சியை அடுத்த திண்ணியம் என்ற ஊரில் வாயில் பீ திணிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவனுக்கு நீதிமன்றமும் தன்பங்குக்கு ஆதிக்க சாதி மலத்தை தீர்ப்பாக திணித்தது.


இந்தியாவின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான நீதிமன்றம் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்புகள் ஒருசிலவற்றைத்தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இந்திய நீதித்துறையின் வரலாறே இதுபோன்ற பக்கங்களால்தான் நிரப்பப்பட்டுள்ளது. சட்டமும் நீதியும் ஆளூகின்ற வர்க்கத்தின் தன்மையைப் பிரதிபலிப்பது எதார்த்தமே. மதப் பிரச்சினையானாலும், சாதியப் போராட்டங்களானாலும், முதலாளித்துவ கொடூரங்களானாலும் இந்த நீதிமன்றங்களின் வர்க்கப்பாசம் ஒளிவுமறைவிற்கு இடமின்றி வெளிப்படையாக அம்பலப்பட்டு நிற்பதை நாம் பார்க்க முடிகிறது. இனியும் இந்த நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு நீதியை வழங்கும் என்று நம்பிக்கொண்டிருப்பதற்கு எந்த முகாந்திரமுமில்லை.


இந்த அநீதிமன்றங்களுக்கு எதிராக உண்மையான நீதியை நிலைநாட்டுவதற்கு மக்கள் சர்வாதிகார மன்றங்களை நாம் கட்டியமைக்க வேண்டிய காலம் நெருங்கிவருகிறது. ஒடுக்கப்பட்டு கிடக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்குச் சாதகமான நீதியை நாம் நீதிமன்றச் சுவர்களுக்குள் பெறமுடியாது, மக்கள் மன்றத்தின் முன்பாகத்தான், நடுவீதியில்தான் அவற்றை நாம் நிலைநாட்ட முடியும்.


அயோத்தி தீர்ப்பு கிடக்கட்டும், இந்த அயோக்கியத் தனங்களை முற்றாகத் துடைத்- தெறிகின்ற புரட்சிகர போராட்டங்களை நோக்கி அணிதிரள்வோம்! நன்றி!

===============================================

தொடர்புடைய (அவசியம் படிக்க வேண்டிய) பதிவுகள்:

1. அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!! - அசுரன்

2. ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்! - செங்கொடி மருது.

3. கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு? - செங்கொடி.

4. நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி! - வினவு.

==============================================


2 comments:

smart said...

நீங்கள் எடுத்தவுடனே பி.ஜி.பி.காரர்கள் மீது கோவமாக உணர்ச்சிவசத்தில் எழுதியிருப்பது தெரிகிறது. பொறுமையாக நடுநிலையோடு சிந்திக்க வேண்டுகிறேன்.
ஒரு சின்ன உதாரணம்
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை போது பாக்.லுள்ள இந்துக்கள் எண்ணிக்கையும் தற்போதுள்ள எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ளவும். அதே போல இந்தியாவில உள்ள முஸ்லீம்களின் அன்றைய மற்றும் இன்றைய எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ளவும். இந்தியாவின் மதச்சார்பின்மை புரியும்.

மொத்தமாகப் பார்த்தால் சகோதரத்துவத்திற்கு உங்கள் பதிவு பாதிக்கிறது.
//என்று வரவிருக்கும் தீர்ப்பின் யோக்கியதையை முன்னறிவித்திருக்கிறார் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்.//
ஒரு ஜனநாயக நாட்டில் இப்படிக் கூட சொல்ல கூடாதா? பின் எப்படி சொல்லவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.?

விவாதகளம்... said...

மொத்தமாகப் பார்த்தால் சகோதரத்துவத்திற்கு உங்கள் பதிவு பாதிக்கிறது.
//என்று வரவிருக்கும் தீர்ப்பின் யோக்கியதையை முன்னறிவித்திருக்கிறார் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்.//
ஒரு ஜனநாயக நாட்டில் இப்படிக் கூட சொல்ல கூடாதா? பின் எப்படி சொல்லவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.?


"தீர்ப்பு எப்படியிருந்தாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்பவர் ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்க முடியாது, சர்வாதிகார அரசின் பிரதிநிதியாகத்தான் இருக்க முடியும், நண்பரே!

ஒரு கண்ணில் வெண்ணையையும் மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைத்துவிடும் இந்த ’சகோதரத்துவத்தை’ கேள்விக்குட்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன், நண்பரே!

நீங்கள் எடுத்தவுடனே பி.ஜி.பி.காரர்கள் மீது கோவமாக உணர்ச்சிவசத்தில் எழுதியிருப்பது தெரிகிறது. பொறுமையாக நடுநிலையோடு சிந்திக்க வேண்டுகிறேன்.

எதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும், நண்பரே? சேதுக்கால்வாய்த் திட்டத்தில் இடறியது மணல்திட்டுதான், அது ராமர் பாலமில்லை என்று புவியியல் ஆதாரங்களுடன் சொன்ன ஆய்வாளர்களைத் தண்டித்துவிட்டு, துளசிதாசர் இராமாயணத்தையும் வால்மீகி இராமாயணத்தையும் ஆதாரமாக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றத்தை எப்படி மதிப்பிடுவது, ஐயா?

பா.ஜ.க.வை விட்டுத்தள்ளுங்கள் இந்த நீதிமன்றங்களுக்கு நீதிசொல்லும் அருகதையே கிடையாது என்பதைத்தான் அவற்றின் வரலாற்று ரீதியிலான தீர்ப்புகள் எடுத்துச் சொல்கின்றன. இந்த அநீதியாளர்கள் வழங்கும் நீதியை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

Post a Comment