Friday, September 17, 2010

இது வளர்ச்சியல்ல; இதுதான் ஏகாதிபத்தியம்!

க்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட்) என்பது, மக்கள் மீது மறுகாலனியாக்கத்தைத் துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிச போர். இதனைப் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டுப் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். ஜன-4, “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளேட்டில் வெளிவந்துள்ள, பி.யு.சி.எல் அமைப்பைச் சார்ந்தவரும் சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான சுதா பரத்வாஜின் நேர்காணல் இதனை நிரூபிக்கிறது. அதன் சாரம் வருமாறு:


  • சிங்காரம் என்ற இடத்தில் போலி மோதலில் கொல்லப்பட்ட 19 பேர் நக்சலைட்டுகளல்ல, அப்பாவிப் பழங்குடி மக்கள் என்று சொன்ன குற்றத்துக்காக காங்கிரசு எம்.எல்.ஏ சுவாசி லக்மாவின் போலீசு பாதுகாப்பை ரத்து செய்தார், மாவட்ட ஆட்சியர். காட்டுவேட்டையை அம்பலப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அரசு அவர்களைச் சகித்துக் கொள்வதில்லை என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம்.


  • ரணடைந்த நக்சலைட்டுகள் என்று 2007 முதல் சிறை வைக்கப் -பட்டிருக்கும் 79 பேரில் பெரும்பான்மையினர் அப்பாவிப் பழங்குடிகள் என்றும், சிலர் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் என்றும் பாரதிய ஜனதாவின் எம்.எல்.ஏ பகிரங்கமாக அறிவித்த போதிலும், ஒருவர்கூட விடுவிக்கப்படவில்லை.


  • காட்டுவேட்டை குறித்து போலீசு அறிக்கைகள் தவிர எதையும் பத்திரிகைகள் பிரசுரிக்கக் கூடாது என்றும், போலீசு அறிக்கைக்கு மாறாக எழுதினாலோ, மாவோயிஸ்டுகளின் அறிக்கைகளைப் பிரசுரித்தாலோ அரசைக் கவிழ்க்கும் சதிக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என்று கடந்த செப்டம்பர் மாதம் எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் போலீசு நோட்டீசே கொடுத்துவிட்டது. போலீசின் உத்தரவை மீறிய பத்திரிகையாளர்கள் சத்தீஸ்கர் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைத்து செய்யப்பட்டுள்ளனர். இந்த போலீசு ராஜ்ஜியத்தை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஜக்தல்புரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.


  • மொத்தத்தில், எந்த வகையில் அதிருப்தி வெளியிட்டாலும் அது கிரிமினல் குற்றம். அரசுக்கு எதிராக யார் பேசினாலும், எழுதினாலும் அவர்கள் நக்சலைட் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். மனித உரிமைப் போராளி மருத்துவர் பினாயக் சென், ‘சுதந்திர’ப் போராட்ட வீரர் ராம் குமார் அகர்வால், காந்தியவாதி ஹிமான்சு குமார், சுற்றுச் சூழலாளர் ஜெயந்த் போஹிதார் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதுதான் மெக்கார்தேயிசம்!

  • பிலாய் உருக்காலை தொடங்கபட்டபோது கூட பழங்குடியினரின் நிலம் எடுக்கப்பட்டது. ஆனால் 96,000 பேருக்கு அரசுத்துறையில் நிரந்தர வேலை கிடைத்தது. இப்போது நிரந்தர வேலையும் கிடையாது, நிவாரணமும் கிடையாது. நிலத்தைக் கொடு என்று மக்களின் சொத்தையும், தேசத்தின் வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பிடுங்கிக் கொடுக்கிறது அரசு. சென்ற ஆண்டு இரும்புத் தாதுவின் விலை டன்னுக்கு 5,800 ரூபாய் என்று உயர்ந்தபோது, அரசுத்துறை எஃகு ஆலைகள் மூடிக்கிடந்தன. ஆனால், பைலதில்லா சுரங்கத்திலிருந்து உயர்தர இரும்புத்தாதுவை ஒரு டன் 400 ரூபாய்க்கு ஜப்பான் எடுத்துச் சென்று கொண்டிருந்தது. இவையெல்லாம் வளர்ச்சி என்பதும் முன்னேற்றம் என்பதும் பொய். இதுதான் ஏகாதிபத்தியம்!


  • கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலம் தரமறுத்து தீர்மானம் நிறைவேற்றும் கிராமசபை உறுப்பினர்கள் துப்பாக்கி முனையில் போலீசால் மிரட்டப்படுகிறார்கள். மக்கள் கருத்தறிதல் நிகழ்ச்சிகள் அனைத்தும் போலீசு முற்றுகையின் கீழ்தான் நடத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் மீறி நமது வளங்களைக் காக்கப் போராடும் பழங்குடி மக்களுக்கு நாடே நன்றிக் கடன்பட்டிருக்கிறது.

புதிய ஜனநாயகம் - பிப்பிரவரி/2010.

===================================================

தொடர்புடைய பிற கட்டுரைகள்:



No comments:

Post a Comment